பா.ஜனதாவை வெற்றி பெற செய்ய அமித்ஷாவின் ராஜதந்திரிகள் 11 பேர் கர்நாடகம் வருகை
சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை வெற்றி பெற வியூகங்களை வகுக்க அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவின் ராஜதந்திரிகள் 11 பேர் கர்நாடகம் வந்துள்ளனர்.
பெங்களூரு,
அடுத்த மாதம் (மே) 12-ந்தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இருப்பினும், தனி பெரும்பான்மை கிடைக்கும் வகையில் அதிக இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தில் பா.ஜனதா கட்சியை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த பா.ஜனதா மேலிடம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அமித்ஷாவின் ராஜதந்திரிகள் 11 பேர் கர்நாடகம் வந்துள்ளனர். இவர்கள், உத்தரபிரதேசம், அசாம், குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளர்களாக செயல்பட்டு பா.ஜனதாவுக்கு வெற்றி தேடிதந்தவர்கள் ஆவார்கள். இதனால் அவர்களை பா.ஜனதாவினர் அமித்ஷாவின் ராஜதந்திரிகள் என்று கூறுகிறார்கள். இந்த குழுவில் அமித்ஷாவின் வலது கை என கூறப்படும் பூபேந்திர யாதவும் இடம் பெற்றுள்ளார்.
அதன்படி, ராம் யாதவ், ஸ்வதந்திர தேவ் ஆகியோர் ஐதராபாத்-கர்நாடக பகுதிக்கும், பூபேந்திர யாதவ், சந்திரகாந்த் தாதா பட்டீல் ஆகியோர் மும்பை-கர்நாடக பகுதிக்கும், மங்கலபாண்டே மத்திய கர்நாடக பகுதிக்கும், சதீஷ் உபாத்யாயா, சி.ஆர்.பட்டீல் ஆகியோர் பழைய மைசூரு பகுதிக்கும், ஓ.பி. மாதுர், மகேந்திர சிங் ஆகியோர் கடலோர கர்நாடகத்துக்கும், ஆசிஷ் ஷெலார், கோபல்ஷெட்டி ஆகியோர் பெங்களூருவுக்கும் பொறுப்பாளர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிஷத் அமைப்புகளில் திறமையாக செயல்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடகம் வந்துள்ள 11 பேரும், மாநில தேர்தலில் பா.ஜனதாவை வெற்றி பெற செய்வதற்கான அனைத்து வியூகங்களையும் மேற்கொள்ள உள்ளனர். வாக்காளர்களின் மனநிலையை பா.ஜனதாவுக்கு ஆதரவாக மாற்ற அவர்கள் தீவிர முயற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று பா.ஜனதா கட்சியின் சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பிலும் இவர்கள் ஈடுபட இருக்கிறார்கள். அத்துடன், இளம் வாக்காளர்களை பா.ஜனதா கட்சியில் சேர்க்கும் பணியையும் இவர்கள் மேற்கொள்வது முக்கிய பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story