சட்டவிரோத கட்டுமானத்தை அனுமதித்த மாநகராட்சி அதிகாரியை பணி இடைநீக்கம் செய்ய அரசு உத்தரவு


சட்டவிரோத கட்டுமானத்தை அனுமதித்த மாநகராட்சி அதிகாரியை பணி இடைநீக்கம் செய்ய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 19 April 2018 5:28 AM IST (Updated: 19 April 2018 5:28 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சியின் ‘சி' வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக 9 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

மும்பை,

மாநகராட்சிக்கு பலமுறை புகார்கள் வந்தும், கட்டுமானத்திற்கு எதிராக அந்த வார்டு உதவி கமிஷனர் ஜீவக் கெடமால் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பிரச்சினை கடந்த மாதம் நடந்த மாநில அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது. இதையடுத்து மாநகராட்சி உதவி கமிஷனர் பணி இடைநீக்கம் செய்யப்படுவார் என மாநில அரசு தெரிவித்தது. இந்த நிலையில், சம்மந்தப்பட்ட மாநகராட்சி கமிஷனர் மற்றும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரையும் பணி இடைநீக்கம் செய்யும்படி மும்பை மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தாவுக்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக 7 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story