53 டாக்டர்களுக்கு மராட்டிய மருத்துவ கவுன்சில் சம்மன்


53 டாக்டர்களுக்கு மராட்டிய மருத்துவ கவுன்சில் சம்மன்
x
தினத்தந்தி 19 April 2018 5:31 AM IST (Updated: 19 April 2018 5:31 AM IST)
t-max-icont-min-icon

போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக 53 டாக்டர்களுக்கு மராட்டிய மருத்துவ கவுன்சில் சம்மன் அனுப்பி உள்ளது.

மும்பை,

மும்பை சி.பி.சி. மருத்துவ கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு பட்டயப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு நிறைவு செய்த சிலர் போலியான தேர்ச்சி சான்றிதழ் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 20 டாக்டர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக போய்வாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மராட்டிய மருத்துவ கவுன்சில் இது தொடர்பாக விசாரணை நடத்த 53 டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இது குறித்து மராட்டிய மருத்துவ கவுன்சில் தலைவர் சிவகுமார் உத்துரே கூறியதாவது:- சி.பி.சி. மருத்துவ கல்லூரி சர்ச்சை குறித்து ஆழமான விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இதன்படி 53 டாக்டர்களின் மதிப்பெண்களை அவர்களது தேர்வு சான்றிதழ்களில் உள்ள மதிப்பெண்களோடு ஒப்பிட்டு பார்க்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story