குரங்குகளின் குதூகல உலகம்!


குரங்குகளின் குதூகல உலகம்!
x
தினத்தந்தி 20 April 2018 4:00 AM IST (Updated: 19 April 2018 11:15 AM IST)
t-max-icont-min-icon

குரங்குகளை பிடிக்காத குழந்தைகளே கிடையாது. அவை செய்யும் சேட்டைகளை நாம் ரசிக்கிறோம். உற்சாகமான உயிரினங்களில் குரங்குகளும் ஒன்று.

னிதர்களின் தவறுகளால் குரங்குகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்படுவதோடு, வாழ்க்கைப் பண்புகளும் மாறிவருகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும். குதூகலம் நிறைந்த குரங்குகள் உலகம் பற்றி அறிவோமா...

* குரங்குகளில் 264 இனங்கள் அறியப்பட்டுள்ளன. இவை பாலூட்டி உயிரினங்களாகும்.

* குரங்குகள் உயர் விலங்கினமாக வகையிடப்பட்டுள்ளன. மனிதன், மனிதக் குரங்குகளுடன் உயர் விலங்கின வகையின் கீழ் மூன்றாவது உயிரினமாக இடம் பெறுகின்றன குரங்குகள்.

* குரங்குகளை பழமை உலக குரங்குகள்,நவீன உலக குரங்குகள் என பொதுவான இரு பிரிவுகளாக வகையிடுகிறார்கள். ஆப்ரிக்கா மற்றும் ஆசிய பகுதிகளில் வசிக்கும் குரங்கினங்கள் பழமை உலக குரங்கினங்களாகும். தென் அமெரிக்க பகுதிகளில் நவீன உலக குரங்கினங்கள் காணப்படுகின்றன.

* பபூன் குரங்கினம் பழமையான உலக குரங்கினமாகும். மார்மோஸ்ட் குரங்கினம் நவீன உலக குரங்கினமாகும்.

* பழமை உலக குரங்குகள் 32 பற்கள்கொண்டுள்ளன. புதிய உலக குரங்குகள் 36 பற்களைகொண்டுள்ளன.

* பெரும்பாலான குரங்கினங்கள்மரங்களில் வாழ்கின்றன. சில குரங்கினங்கள்தரையில் வாழும் இயல்பு கொண்டவை.

* பழங்கள், கொட்டைகள், பூக்கள், இலைகள், போன்றவை குரங்குகளின் உணவுகளாக உள்ளன. சில குரங்கினங்கள் மட்டும் பூச்சிகள், பல்லிகள்,நண்டுகள், முட்டைகள் போன்றவற்றையும் சாப்பிடுகின்றன.

* பெரும்பாலான குரங்குகள் வால்களைப் பெற்றிருக்கின்றன.சில குரங்கினங்களுக்கு வால் கிடையாது.

* குரங்குகளின் குழு, ‘டிரைப்’, ‘ட்ரூப்’, ‘மிஷன்’ என்றழைக்கப்படுகின்றன.

* பிக்மி மார்மோசெட் குரங்குகள், மிகச்சிறிய உருவம் கொண்ட குரங்கினமாகும். இவை அதிகபட்சம் 140 கிராம் எடைகொண்டது. 6 அங்குலமே வளர்கின்றன.

* மன்றில்என்பது மிகப்பெரிய உருவம் கொண்ட குரங்கினமாகும். இவை அதிகபட்சம் 35 கிலோ எடைகொண்டது. 3½ அடி உயரம் வளரக்கூடியது.

* பிரேசில் நாட்டில் அதிகமான குரங்கினங்கள் உள்ளன.

* வனம், புல்வெளி, மேடான இடங்கள்,மலைப்பிரதேசங்கள் அனைத்திலும் குரங்குகள் வசிக்கின்றன. பனிப்பிரதேசத்தில் மட்டும் குரங்குகள் காணப்படவில்லை.

* காபுச்சின் குரங்குகள் புத்திசாலித்தனமிக்க நவீன உலக குரங்குகளாகும். இவைகருவிகளை பயன்படுத்தும் ஆற்றல் மிக்கவை. கற்கும் திறன் பெற்றவை. சுய விழிப்புணர்வுக்காக பல்வேறு சைகைளை செய்யும் திறன் பெற்றவை.

* சிலந்தி குரங்குகள் என்று ஒரு குரங்கினம் உள்ளது. இவற்றின் நீளமான கை, கால்கள் மற்றும்வால் போன்றவை அவை நகரும்போதுசிலந்தி தோற்றத்தை தருவதால் இவற்றுக்கு அந்தப் பெயர் வந்தது.

* சீன ராசிக்கட்டத்தில் 9-வது விலங்காக குரங்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் 2016-ல்அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* குரங்குகள் தங்களுக்குள் விதவிதமான ஒலிகள், முகபாவனைகள்,சைகைகள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்கின்றன.

* ஹோவ்லர் குரங்கினம் அதிக ஒலி எழுப்பக்கூடியவை. இவற்றின் ஒலியை 3மைல் தொலைவுக்கு அப்பால் இருந்தும் கேட்கலாம்.

* குரங்குகள் விளையாடுதல், அரவணைத்தல், சண்டையிடுதல், கூடி வாழ்தல், பகிர்ந்தல் போன்ற பண்புகளைக் கொண்ட சமூக விலங்குகளாகும்.

* குரங்குகள் தன் குட்டிகளின் மீது அதிக பாசம் கொண்டவை. அவற்றின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறையுடன் செயல்படும்.எங்கு சென்றாலும் முதுகிலும், கழுத்திலும்,வயிற்றிலும் குட்டிகளை சுமந்து செல்லக்கூடியவை தாய்க் குரங்குகள்.

* குட்டிக் குரங்குகள் 5 ஆண்டுகளில் முளுமையான வளர்ச்சி அடைகின்றன.

* குரங்குகள் மனிதர்களைப் போன்ற விரல்அமைப்பும், தனித்துவம் மிக்க கைரேகைகளும் கொண்டவை.

* குரங்குகள் கை, கால் விரல்களை மட்டும்பற்றிப்பிடிக்க பயன்படுத்துவதில்லை.வால்களையும் பொருட்களை பற்றிப் பிடிக்க பயன்படுத்துவதுண்டு. கிளைகளில் வால்களின்உதவியால் தலைகீழாக தொங்கும் குரங்குகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள் இல்லையா?

* ரோலேவே குரங்கு, பென்னன்ட்ஸ் ரெட் குலோபஸ் குரங்கு, டானா ரிவர்ரெட் குலோபஸ் குரங்கு, பிபுன்ஜி, லாங்குர் இன குரங்குகள், ஸ்பைடர் இன குரங்குகள், ஊல்லி மங்கி உள்ளிட்ட பல குரங்கினங்கள் அழியும் நிலையில்உள்ளன.

* குரங்குகள் மனிதனோடு பழகும்ஆற்றல் கொண்டவை. அவற்றின் வசிப்பிடங்கள்அழிக்கப்படுவதால் அவை ஊருக்குள் புகுந்துஅட்டகாசம் செய்வது உண்டு. அவற்றுக்கு தின்பண்டங்கள் அளிப்பது தவறான செயலாகும்.பல சுற்றுலா மையங்களில் குரங்குகளுக்கு உணவளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. நாம்அவற்றுக்கு உணவளித்து பழகுவதால் அவற்றின் வாழ்வியல் பண்புகள் மாறிவருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதனால் அவை நம்மிடம் இருந்து உணவு பொருட்களைஎதிர்பார்ப்பதும், பிடுங்கிச் செல்வதும் வழக்கமாகி வருகின்றன. மனிதர்களை தாக்குவதும் அவ்வப்போது நிகழ்கின்றன. எனவே விலங்குகளை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வது அவற்றுக்கும், நமக்கும் நன்மை பயக்கும்! 

Next Story