நெல்லையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை


நெல்லையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 20 April 2018 3:00 AM IST (Updated: 19 April 2018 8:42 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லை, 

நெல்லையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நினைவு நாள் 

‘பத்மஸ்ரீ‘ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 5–ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை ‘தினத்தந்தி‘ அலுவலகத்தில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. ‘தினத்தந்தி‘ ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார், முன்னாள் எம்.பி.ராமசுப்பு, மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், கட்சி நிர்வாகிகள் சங்கரநாராயணன், தனசிங் பாண்டியன், வாகைகணேசன், சிவன்பெருமாள், இசக்கி, முகமது அனஸ்ராஜா, காவேரி, கலைமணி, சேக் பக்கீர் மைதீன், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம் தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ஆர்.பி.ஆதித்தன், அவைத்தலைவர் கணேசன், பொருளாளர் பால்கண்ணன், துணை செயலாளர் எம்.சி.ராஜன், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பரமசிவ அய்யப்பன், இளைஞர் அணி மாநில இணை செயலாளர் வி.கே.பி.சங்கர், பகுதி செயலாளர்கள் ஜோதி பரமசிவம், பேச்சிமுத்து பாண்டியன், நிர்வாகிகள் சுப்பையா, மாயாண்டி நாதன், மகளிர் அணி தலைவி ராமு வெங்கடாசலம், செயற்குழு உறுப்பினர் தமிழ் செல்வி, மகளிர் அணி நிர்வாகிகள் முத்துலட்சுமி, திவ்யா யாதவ், ராம்சன் உமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

த.மா.கா. 

நெல்லை மத்திய மாவட்ட த.மா.கா. தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சிந்தாசுப்பிரமணியன், கிழக்கு மாவட்ட துணை தலைவர் மாரிதுரை, மாநில பேச்சாளர் லெனின் பாரதி, வர்த்தக பிரிவு தலைவர் சக்கஸ் புன்னகை, பொதுக்குழு உறுப்பினர் டி.பி.எஸ்.சுப்பிரமணியன், மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், சிறுபான்மை பிரிவு தலைவர் செரினா, நிர்வாகிகள் தளவாய், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி செயலாளர் தாயப்பன் தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் கண்ணன், இணை செயலாளர் பகவதிராஜன், மாநகர செயலாளர் கண்ணன், மாநகர இணை செயலாளர் சிகாமணி, நிர்வாகிகள் டாக்டர் ஆசுகவி, ராஜ்குமார், ரஜினி முருகன், மாரியப்பன், ரஜினி பகவதி, சுதாகர், குமார், ரவிக்குமார், தளபதி ராஜ், அருள்தாஸ், ஆறுமுகம், குணசேகர பாண்டியன், கோமதிசங்கர், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. 

தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் கந்தசாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அவருடன் நிர்வாகிகள் துர்கா குமரன், கஜேந்திரன் ஆகியோர் வந்து இருந்தனர். தட்சணமாற நாடார் சங்க பொருளாளர் செல்வராஜ் நாடார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நாடார் மக்கள் பேரவையின் நெல்லை மாவட்ட தலைவர் ஜான் தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அவருடன் கட்சி நிர்வாகிகள் ஜோ, அரியகோபால் ஆகியோர் வந்து இருந்தனர்.

நற்பணி மன்றத்தினர்... 

நெல்லையை அடுத்த நடுக்கல்லூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்துக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் எஸ்.எஸ்.எஸ்.நாதன் தலைமை தாங்கினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தொழில் அதிபர் ஏ.எஸ்.ஆறுமுகம், பாலசுப்பிரமணியன், வெள்ளபாண்டி, மாயாண்டி, கல்யாணசுந்தரம், ராமையா, நம்பிராஜ் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சுப்பிரமணிய நாடார் செய்து இருந்தார்.

Next Story