சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் 435 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
முருக்கன்குடி கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் 435 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி வழங்கினார்
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட முருக்கன்குடி கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கினார். முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர் களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி பேசியதாவது:- தமிழக அரசு மக்களின் உயர்விற்காக செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காகவும், அதன் மூலம் பயன் பெறுவதற்கான தகுதிகள் குறித்தும், பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற முகாம் கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே இம்முகாமிற்கு வருகை தந்துள்ள பொதுமக்கள் அனைவரும் அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன் அத்திட்டங்களை முறையாக பயன் படுத்திக்கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை மேம் படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து வருவாய்த்துறை மூலம் 391 பயனாளிகளுக்கு ரூ.77 லட்சத்து 36 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கும், வேளாண்மை துறையின் மூலம் 14 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அம்மா ஸ்கூட்டர் என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 435 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 906 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கி னார். மேலும் குன்னம் வட்டத்தில் சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையிட்டனர். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வ நாதன், தனித்துணை கலெக்டர் மனோகரன், வட்டாட்சியர்கள் தமிழரசன், மனோண்மணி, வருவாய் ஆய்வாளர்கள் சீனிவாசன், சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story