சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் பறிமுதல்
புதுக்கடை அருகே சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய்யை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுக்கடை,
குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய் ஆகியவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதை தடுக்க போலீசார் மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், வருவாய்துறை அதிகாரிகள் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள். ஆனாலும், கடத்தல்காரர்கள் சொகுசு கார், அரசு பஸ் என நூதன முறையில் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் மாவட்ட பறக்கும்படை தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன் மற்றும் அதிகாரிகள் நேற்று புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் ரோந்து சென்றனர்.
800 லிட்டர் மண்எண்ணெய்
அப்போது, அந்த வழியாக ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. அந்த காரை நிறுத்துமாறு அதிகாரிகள் கைகாட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். இதனால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ஜீப்பில் பின்தொடர்ந்து விரட்டினர்.
அதிகாரிகள் விரட்டி வருவதை கண்டதும் வண்டியை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து, அதிகாரிகள் காரை சோதனையிட்ட போது, அதில் பிளாஸ்டிக் கேன்களில் 800 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் இருந்தது. இது கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து காரை கல்குளம் வட்டவழங்கல் அலுவலகத்திலும், மண்எண்ணெய்யை இனயம் அரசு குடோனிலும் ஒப்படைத்தனர்.

Related Tags :
Next Story