எலக்ட்ரீசியனை கொலை செய்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு
வீட்டிற்கு மின் இணைப்பு பெற்றுத்தராததால் எலக்ட்ரீசியனை கொலை செய்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த கொ.வல்லுண்டாம்பட்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 31). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் ஆகி பரமேஸ்வரி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கொ.வல்லுண்டாம்பட்டு நாகம்மாள் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (33). இவர் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வாங்கித்தருமாறு சிவக்குமாரிடம் பணம் கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து 3 மாதங்கள் ஆகியும் சிவக்குமார், மின் இணைப்பு வாங்கிக்கொடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 13-1-2016 அன்று சிவக்குமார் தனது நண்பர்கள் இன்பசேகரன், சரவணன், கருணாநிதி, கார்த்திக் ஆகியோருடன் வீட்டிற்கு அருகே பொங்கல் விளையாட்டு போட்டி நடத்துவது தொடர்பாக பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த கார்த்திகேயன், ஏன் இன்னும் மின் இணைப்பு வாங்கித்தரவில்லை என்று சிவக்குமாரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சிவக்குமாரை குத்தினார்.
இதனை தடுக்க வந்த இன்பசேகரன், சரவணன், கருணாநிதி, கார்த்திக் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த சிவக்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தஞ்சை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து, குற்றவாளியான கார்த்திகேயனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் இறந்த சிவக்குமாரின் மனைவி பரமேஸ்வரிக்கு அரசு வேலை வழங்குமாறும், குழந்தைகளின் படிப்புக்கு உதவவும் அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சதீஷ்குமார் ஆஜரானார்.

Related Tags :
Next Story