நகை, செல்போன் திருடிய வழக்கில் சிறுவன் கைது


நகை, செல்போன் திருடிய வழக்கில் சிறுவன் கைது
x
தினத்தந்தி 20 April 2018 2:53 AM IST (Updated: 20 April 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே நகை, செல்போன் திருடிய வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்டான்.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை போலீசார் நேற்று தாமலேரிமுத்தூர் கூட் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுவனை மடக்கி விசாரணை நடத்தினர். அந்த சிறுவன் முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்தார். பின்னர் தீவிர விசாரணை நடத்தியதில் திருப்பத்தூர் வள்ளலார் நகரை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் வீட்டில் 3½ பவுன் நகை, செல்போன் உள்பட 2 வீடுகளில் செல்போன் திருடியதை ஒப்புக் கொண்டான்.

அதைத்தொடர்ந்து சிறுவனிடம் இருந்த 3½ பவுன் நகை, ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். மேலும் சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story