முதல்-மந்திரி பட்னாவிஸ் கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் மறுப்பு


முதல்-மந்திரி பட்னாவிஸ் கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் மறுப்பு
x
தினத்தந்தி 20 April 2018 5:32 AM IST (Updated: 20 April 2018 5:32 AM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளிலும் கழிவறை வசதி செய்யப்பட்டு விட்டதாக முதல்-மந்திரி கூறியதற்கு தேசியவாத காங்கிரஸ் மறுப்பு தெரிவித்து உள்ளது.

மும்பை,

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மராட்டிய கிராமபுறங்களில் திறந்தவெளி மலம் கழித்தல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறினார். இதற்காக வெறும் 3½ ஆண்டுகளில் கிராமபுறங்களில் கழிவறை இன்றி தவித்த 55 சதவீதம் பேருக்கு கழிவறைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுவிட்டதாக அவர் கூறினார்.

இந்தநிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் செய்திதொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது:-

மராட்டிய கிராமபுறங்களில் திறந்தவெளி மலம் கழித்தல் ஒழிக்கப்பட்டுவிட்டதாக முதல்-மந்திரி கூறுவது உண்மைக்கு மாறானது.. வெறும் 3½ ஆண்டுகளில் 55 சதவீத மக்களுக்கு கழிவறைகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். ஆனால் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் தான் திறந்தவெளி மலம் கழித்தலை ஒழிப்பதற்கு ‘நிர்மல் பாரத் யோஜனா’ எனும் திட்டத்தின் மூலம் பெரும் பங்காற்றியது.

தேசியவாத காங்கிரசின் மாவட்ட தலைவர்களுக்கான தேர்தல் வருகிற 22-ந் தேதி நடைபெறும். இதைத்தொடர்ந்து கட்சியின் மாநில தலைவர் மற்றும் மும்பை பகுதி தலைவருக்கான தேர்தல் வரும் 29-ந் தேதியும், தேசிய தலைவருக்கான தேர்தல் வருகிற மே 13-ந் தேதியும் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story