நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கலிங்கப்பட்டி
நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டி, மலையாங்குளம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களிலும் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அந்தந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் கலிங்கப்பட்டி, திருவேங்கடம், சத்திரப்பட்டி, உமையதலைவன்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம், மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கு இன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இதே போல் கரந்தானேரி, மூலைக்கரைப்பட்டி, பரப்பாடி, கங்கைகொண்டான், வன்னிக்கோனேந்தல் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அந்தந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானான்குளம், மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரை செல்வி, காடான்குளம், சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, ஆளவந்தான்குளம், செழியநல்லூர்.
பரப்பாடி
பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவனைக்காரன்குளம், வில்லியனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கநேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம், தங்கயம், வன்னிகோனேந்தல், மூவிருந்தாளி, தடியம்பட்டி, பன்னீரூத்து, மேல இலந்தைகுளம், கண்ணாடிகுளம், மருக்காலகுளம், தெற்குபனவடலி, நரிக்குடி ஆகிய ஊர்களுக்கு இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
23–ந் தேதி மின்தடை
தாழையூத்து துணை மின்நிலையத்தில் வருகிற 23–ந் தேதி (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம் புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி ஆகிய ஊர்களுக்கு அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை, மின்வாரிய செயற்பொறியாளர்கள் ரமேஷ் (சங்கரன்கோவில்), ராஜன் (பொறுப்பு, நெல்லை கிராமப்புறம்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story