ரேஷன் கடை ஊழியர் மண்எண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு
ரேஷன் கடை ஊழியர் மண்எண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்,
சம்பளம் வழங்காததால் விரக்தி அடைந்த ரேஷன் கடை ஊழியர் ஒருவர் குடும்பத்துடன் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முத்துப்பேட்டை அருகே துறைக்காடு ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்தவர் மாரிமுத்து. இவர் நேற்று தனது மனைவி, மகன், மகளுடன் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சந்தேகமடைந்த திருவாரூர் தாலுகா போலீசார் அவரை பிடித்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், முத்துப்பேட்டை அருகே துறைக்காடு ரேஷன் கடையில் கடந்த 1987-ம் ஆண்டு முதல் உதவியாளராக பணியில் வந்து சேர்ந்துள்ளார். அதன்பின்னர் 1995-ம் ஆண்டு முதல் விற்பனையாளராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார். அப்போது ரேஷன் கடையில் நடைபெற்ற முறைகேடுகளை தட்டி கேட்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு சம்பளம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு இடைக்காலமாக பணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். மாரிமுத்து தன்னை எதற்காக பணியில் இருந்து நீக்கம் செய்தீர்கள் எனவும், 2 ஆண்டு கால சம்பளத்தை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த மாரிமுத்து வேலையையும், சம்பளத்தையும் வழங்க வேண்டி நேற்று தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் மண்எண்ணெய் கேனுடன் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்துள்ளார் என்று தெரியவந்தது.
பின்னர் திருவாரூர் தாலுகா போலீசார் அவரை சமாதானம் பேசி அழைத்து சென்றனர். உரிய நேரத்தில் போலீசார் மாரிமுத்துவிடம் இருந்து மண்எண்ணெய் கேனை மீட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Related Tags :
Next Story