பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர்,
காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தியும் ஓசூரில் நேற்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சி (ஏ.ஐ.எம்.ஐ.எம்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் அசார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆசிப் முன்னிலை வகித்தார். பொருளாளர் அமீன் வரவேற்றார். மாநில செயலாளர் இம்தியாஸ் பேசினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இதே போல தேன்கனிக்கோட்டையில், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர தலைவர் சுபேர் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் அஸ்கர் பேசினார். மாவட்ட தலைவர் ஷாநவாஸ், செயலாளர் ஷப்பிர், பொருளாளர் சபியுல்லா, கலில் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் அக்பர் நன்றி கூறினார்.
போச்சம்பள்ளியில் பாரதியார் நற்பணி சங்கம் சார்பில் காஷ்மீரில் சிறுமி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story