தொண்டி பகுதியில் கடல் புழுக்கள் சேகரிக்க வனத்துறை தடை
தொண்டி பகுதிகளில் கடல் புழுக்கள் சேகரிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
தொண்டி,
தொண்டி பகுதியில் உள்ள எஸ்.பி.பட்டினம், பாசிப்பட்டினம், சோளியக்குடி, லாஞ்சியடி போன்ற கடலோர கிராமங்களில் கடல் புழுக்கள் சேகரிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுவருதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனச்சரகர் சதீஷ் ஆலோசனையின் பேரில் தொண்டி பகுதி வனவர் சுதாகர், வன காப்பாளர் ஜோசப், வேட்டை தடுப்பு காவலர் செல்வராஜ் ஆகியோர் நேற்று கடலோர கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சோளியக்குடி, லாஞ்சியடி கடற்கரை பகுதிகளில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கடல் புழுக்கள் சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனே அவர்களை தடுத்து நிறுத்திய வனத்துறையினர் அவர்களிடம் இருந்த மண்வெட்டி போன்ற உபகரணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இப்பகுதியில் கடல் புழுக்கள் சேகரிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடல் புழுக்கள் சேகரித்தால் மாங்குரோவ் காடுகள் அழியும். தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடல் புழுக்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- பண்ணை வளர்ப்பு இறால்களுக்கு கடல் புழுக்கள் தீவனமாக பயன்படுகிறது. ஒரு கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடல் நீர் உள்வாங்கும்போது தான் கடலில் குழி தோண்டி கடல் புழு சேகரிக்க முடியும். சென்னை, நாகை, காஞ்சீ புரம், கடலூர் பகுதிகளில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை கடல் புழுக்கள் சேகரிப்போம். அங்கு கெடுபிடி இல்லை. இங்கு வனத்துறை அதிகாரிகள் தடுத்துவிட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story