எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தக்கோரி சென்டிரலில் ரெயில் மறியல் போராட்டம்
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தக்கோரி சென்டிரலில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தக்கோரியும், இதனை அரசியலமைப்பு சட்ட அட்டவணை 9-ல் சேர்த்திடக்கோரியும் சென்னை சென்டிரல் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி. பி.ஐ. கட்சி மாநிலத்தலைவர் தெகலான் பாகவி, செயலாளர் அமீர் ஹம்சா, செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு இளைஞர் கள் சங்கம் தலைவர் எம்.எம்.ஆர்.மதன், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, திராவிடர் விடுதலை கழகம், தமிழக மக்கள் கட்சி, இளந்தமிழகம், தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி போராட்டக்காரர்கள் சென்டிரல் ரெயில் நிலையத்தை நோக்கி முன்னேறினர். போலீசாரின் தடுப்புகளை தாண்டியும் ஆவேசமாக சென்ற போராட்டக்காரர்கள் அங்கு நின்றிருந்த ரெயில்கள் முன்பு சென்று போராட்டம் நடத்தினர். சிலர் தண்டவாளத்திலேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, ரெயில் மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது ஏழுகிணறு மற்றும் ராயபுரத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர். அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story