மாவட்ட செய்திகள்

இலவச அரிசி வழங்க ஒப்புதல் தராமல் அரசுக்கு கவர்னர் கிரண்பெடி களங்கம் ஏற்படுத்த முயற்சி - முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு + "||" + Trying to make the governor's grievances to the state Narayanasamy's allegation

இலவச அரிசி வழங்க ஒப்புதல் தராமல் அரசுக்கு கவர்னர் கிரண்பெடி களங்கம் ஏற்படுத்த முயற்சி - முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

இலவச அரிசி வழங்க ஒப்புதல் தராமல் அரசுக்கு கவர்னர் கிரண்பெடி களங்கம் ஏற்படுத்த முயற்சி - முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
இலவச அரிசி வழங்க ஒப்புதல் தராமல் அரசுக்கு கவர்னர் கிரண்பெடி களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை அரசு ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது 6 மாத காலம் இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு ரூ.180 கோடிக்கு நிதி ஒதுக்குவதற்காக கோப்புகள் தயாரித்து கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதற்கு கவர்னர் ஒப்புதல் தராமல் அரிசிக்கு பதிலாக பணமாக தர கூறினார். ஆனால் நான் கவர்னரை நேரடியாக சந்தித்து இலவச அரிசி தருவது என்பது தேர்தல் வாக்குறுதி. அதனை நிறைவேற்றும் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது என்று தெரிவித்தேன்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்னர் கிரண்பெடி கிருமாம்பாக்கம் சென்றபோது அங்கு இருந்த பெண்களிடம் அரிசி வேண்டுமா? பணம் வேண்டுமா? என்று அவர் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் அரிசி தான் வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனாலும் கவர்னர் அந்த கோப்புக்கு ஒப்புதல் அளிக்காமல் தனது மாளிகையிலேயே வைத்துள்ளார்.

இது மாநில அரசின் திட்டம், நிதி ஒதுக்கீடு செய்தது மாநில அரசு, நிறைவேற்றுவதும் மாநில அரசுதான். எனவே மக்கள் விருப்பத்திற்கான திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இலவச அரிசி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிதி பற்றாக்குறை இல்லை. வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டுள்ளது. கவர்னர் காலம் தாழ்த்தி புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கிறார்.

இதை ஏற்க முடியாது. புதுச்சேரி அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். மாநில அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சில சக்திகள் செயல்படுகின்றன. 6 மாதத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். சந்தர்ப்ப சூழ்நிலையால் பொறுமையாக உள்ளோம். பொறுமையை சோதிக்க வேண்டாம். ஒரு சிலர் இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்துக்கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் நிறைவேற்றும் திட்டங்களுக்கு தடை போட்டு வருகின்றனர். அது யார் என புதுச்சேரி மக்களுக்கு தெரியும். குறுகிய காலத்தில் இலவச அரிசி மக்களுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.