திருப்பூர் அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
திருப்பூர் அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். குளிக்க சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
வீரபாண்டி,
திருப்பூர் பலவஞ்சிப்பாளையம் கே.எஸ்.நகரை சேர்ந்தவர் மணி. பனியன் நிறுவன டெய்லர். இவரது மனைவி அமுதா. இவர்களது மகன்கள் மாதேஷ் (வயது 13), அரவிந்த் (10). மாதேஷ் அந்த பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகன் மகாஷ் (12). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
மாதேஷ், மகாஷ் இருவரும் நண்பர்கள். தற்போது பள்ளி ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் 2 பேரும் சேர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று விளையாடுவதை வழக்கமாக கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 பேரும் சேர்ந்து வீரபாண்டி பஸ் நிலையம் அருகே கல்லாங்காடு ரோடு பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்கு குளிக்க சென்றனர். 40 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 15 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. மேலும் கிணற்றில் இறங்கி குளிப்பதற்காக வசதியாக கிணற்றினுள் படிக்கட்டுகளும் சீராக உள்ளன.
இந்த 2 மாணவர்களும் குளிக்க சென்ற நேரத்தில் அங்கு, கிணற்றுக்குள் ஏற்கனவே 2 சிறுவர்கள் குளித்துக்கொண்டு இருந்தனர். இதையடுத்து மாதேசும், மகாசும், தங்களது உடைகளை கழற்றி கிணற்றுக்கு வெளியே வைத்து விட்டு, படிக்கட்டுகள் வழியாக கிணற்றுக்குள் மெதுவாக இறங்கினார்கள். பின்னர் அங்குள்ள படியில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கால் வழுக்கி ஒரு மாணவன் தண்ணீருக்குள் விழுந்தான். இதற்கிடையில் தண்ணீருக்குள் விழுந்த மாணவன், படியில் நின்று கொண்டிருந்த மற்றொரு மாணவனின் காலை பிடித்ததால் அவனும் தண்ணீருக்குள் விழுந்தான். இதனால் 2 மாணவர்களுக்கும் தண்ணீருக்குள் தத்தளித்தனர்.
இதற்கிடையில் கிணற்றுக்குள் ஏற்கனவே குளித்துக்கொண்டிருந்த மற்ற சிறுவர்கள் பயந்துபோய், கிணற்றில் இருந்து வெளியேறி, ஓடிச்சென்று அருகில் உள்ள பொதுமக்களிடம் “ 2 பேர் தண்ணீருக்குள் மூழ்கிக்கொண்டு இருப்பதாகவும், அவர்களை உடனே காப்பாற்றுமாறும் பதற்றத்துடன்” கூறினார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த கிணற்றுக்கு வேகமாக ஓடிச்சென்று மாணவர்களை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் அதற்குள் அந்த 2 மாணவர்களும் தண்ணீருக்குள் மூழ்கி விட்டனர். இது குறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும், வீரபாண்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றுக்குள் இறங்கி, மாணவர்களை தேடினார்கள். பின்னர் சிறிது நேரத்தில் 2 மாணவர்களின் உடல்களையும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். மாணவர்களின் உடலை பார்த்ததும் அவர்களது பெற்றோர்கள் கதறி அழுதது காண்பவர்களை கண்கலங்க செய்தது.
இந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதன்பின்னர் மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளிக்க சென்ற மாணவர்கள் கிணற்றுக்குள் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story