ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ் கவிழ்ந்தது: கல்லூரி மாணவி, சிறுமி பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பஸ் கவிழ்ந்ததில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவியும் சிறுமியும் உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
மதுரையிலிருந்து ராஜபாளையம் நோக்கி நேற்று பிற்பகல் தனியார் பஸ் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பேரையூர், எஸ்.அரசபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் ஓட்டி வந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டி அருகே 2 மணி அளவில் வரும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த நெல்லை மாவட்டம் சுரண்டையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருடைய மகளும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவியுமான சிந்து (வயது 19), சங்கரன்கோவில் வடக்கு நாச்சியார்புரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மகள் சுஜிதா(9) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தார்கள்.
சுஜிதாவின் தாயார் மகாலட்சுமி(25), தங்கை சஜிதா(4), வன்னிதேவன்பட்டி தங்கேஸ்வரன் (33), கோபாலபுரம் அஸ்வின்குமார் (23), ராஜபாளையம் சங்கரலிங்காபுரத்தை சேர்ந்த காளிராஜ் (21), வாசுதேவநல்லூர் ராஜா (21), சொக்கநாதன்புத்தூர் பாலகிருஷ்ணன் (40), ஸ்ரீவில்லிபுத்தூர், மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த மலர்விழி (40), புதுக்கோட்டை சரோஜா (60), மதுரை கரிமேடு பூங்கொடி உள்ளிட்ட 21 பேர் காயமடைந்தனர். அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
நத்தம்பட்டி போலீசாருடன் ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கியவர்களின் அலறல் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து பஸ்சை உடைத்து உள்ளே சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தினால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நத்தம்பட்டி போலீசார் பஸ் டிரைவர் முத்துபாண்டியை கைது செய்தனர்.
விபத்தில் உயிரிழந்த சிந்து புதுக்கோட்டையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். சுஜிதாவின் தந்தை சுரேஷ் சங்கரன்கோவில் அருகே வடக்கு நாச்சியார்புரத்தை சேர்ந்தவர். இவர் கோவை வேலாண்டிபாளையத்தில் குடியிருந்து, ஓட்டலில் சமையல்காரராக பணியாற்றுகிறார். குடும்பத்துடன் சொந்த ஊரில் நடைபெறும் பொங்கல்விழாவில் கலந்து கொள்ள சென்றபோது விபத்தில் சிக்கினர்.

Related Tags :
Next Story