கால்நடை மருத்துவ அலுவலர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்


கால்நடை மருத்துவ அலுவலர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
x
தினத்தந்தி 22 April 2018 4:00 AM IST (Updated: 22 April 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ அலுவலர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ராகவன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தனபாலன் உள்பட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. முன்னதாக திருச்சி மாவட்ட தலைவர் சுகுமார் வரவேற்றார். முடிவில் வேடியப்பன் நன்றி கூறினார்.

ஊதிய முரண்பாடுகளை நீக்க...

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-

7-வது ஊதிய குழுவில் கால்நடை மருத்துவர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசாணை 49-ஐ அமல்படுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story