குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க.செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரிகட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் மாதையன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் சூடப்பட்டி சுப்பிரமணி, முனிராஜ், விஜிலா, மாது. மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி ஒன்றிய செயலாளர் சேட்டு வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். தமிழகத்தின் ஜீவாதாரமாக விளங்கும் காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை(திங்கட்கிழமை) மாலை 4 மணி முதல் 5 மணி வரை தர்மபுரி அரசு மருத்துவமனை அருகில் இருந்து நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
குடிநீர் பிரச்சினை
தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டாலும் பல்வேறு கிராமங்களில் இதுநாள்வரை பாதுகாக்கப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான கிராமங்களில் கோடை காலத்தையொட்டி குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தல்களை நியாயமான முறையிலும், ஜனநாயக முறைப்படியும் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க. சார்பில் உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப அணிக்கு வாக்குச்சாவடி அளவில் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் வக்கீல் அணி மாவட்ட நிர்வாகி மணி, முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டிமுருகேசன், மகளிரணி மாவட்ட அமைப்பாளர் ராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், கோபால், குமரவேல், செல்வராஜ், சித்தார்த்தன், சண்முகநதி, சிவப்பிரகாசம், கட்சி நிர்வாகிகள் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி நகர செயலாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story