8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 April 2018 4:15 AM IST (Updated: 22 April 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து கூத்தாநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றினர்.

கூத்தாநல்லூர்,

காஷ்மீரில் 8 வயது சிறுமியை கற்பழித்து படுகொலை செய்தவர்களை வன்மையாக கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கூத்தாநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு விமன் இந்தியா மூமெண்ட் மாவட்ட தலைவி நசிமாபானு தலைமை தாங்கினார். மாநில தலைவி நஜ்மாபேகம், மாநில செயலாளர் தஸ்லிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அப்போது மெழுகுவர்த்தி கையில் ஏந்தி இறந்த சிறுமிக்கு இரங்கல் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story