காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் நடைபயணம்-ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அறந்தாங்கி அருகே விவசாயிகள் நடைபயணம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி,
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவ-மாணவிகள், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசன தாரர் விவசாயிகள் கூட் டமைப்பு சார்பில் அறந்தாங்கி அருகே கண்டிச்சங்காட்டில் நடைபயணம் நடைபெற்றது. இந்த நடைபயணத்தை சிங்கவனம் ஜமீன்தார் ராமசாமி மெய்க்கன் கோபாலர் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில விவசாய பிரிவு துணைத் தலைவர் செல்வரத்தினம் முன்னிலை வகித்தார். கண்டிச்சங்காட்டில் இருந்து தொடங்கிய நடைபயணம் ஏகணிவயல், சந்தமனை, புறங்காடு, காராவயல் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக வழியாக நாகுடியை வந்தடைந்தது. நடைபயணமாக வந்த விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி, முழக்கங்கள் இட்டவாறு வந்தனர்.
இதில் புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் ராமசாமி, செயலாளர் கணேசன், பொருளாளர் கருப்பையா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் பரணி.கார்த்திகேயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பையா, அறந்தாங்கி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன்.கணேசன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர், முன்னதாக கண்டிச்சங்காட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நடைபயணத்தில் ஏகப்பெருமாளூரை சேர்்ந்த முன்னோடி விவசாயியும், மாவட்ட தி.மு.க. பிரதிநிதியுமான பந்தா ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் மாட்டுவண்டியில் ஏர்கலப்பையை வைத்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். அப்போது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மாவட்ட செயலாளர் பரணிகார்த்திகேயன், அந்த மாட்டுவண்டியை சிறிது தூரம் ஓட்டி வந்தார். இந்த நடைபயணத்தையொட்டி அப்பகுதியில் அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story