பள்ளி மாணவியை கடத்தியதாக வாலிபர் கைது


பள்ளி மாணவியை கடத்தியதாக வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 April 2018 3:19 AM IST (Updated: 22 April 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

அணைக்கட்டு அருகே பள்ளி மாணவியை கடத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அணைக்கட்டு,

அணைக்கட்டு அருகே உள்ள பெரியகெங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சக்திவேல் (வயது 24) என்பவர் கடத்திச்சென்று விட்டதாக மாணவியின் தந்தை அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். மைனர் பெண்ணை கடத்திய குற்றத்துக்காக சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.


Next Story