ஏழைகளுக்கு இலவச கியாஸ் சிலிண்டர், அடுப்பு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்
கூடலூர் நகராட்சியில் ஏழைகளுக்கு இலவச கியாஸ் சிலிண்டர், அடுப்பு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
கூடலூர்,
கூடலூர் நகராட்சியில் ஏழைகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர், அடுப்பை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
இந்தியா முழுவதும் கடந்த 14-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை கிராம சுராச் அபியான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் உஜ்வாலா எனும் சமூக நீதி மற்றும் தூய்மை பாரத நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏழைகளுக்கு இலவச கியாஸ் சிலிண்டர், அடுப்பு வழங்கும் விழா கூடலூர் கோடமூலா ஆதிவாசி காலனியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் தருமலிங்கம், ஆர்.டி.ஓ. முருகையன், நகராட்சி ஆணையாளர் பார்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 15 பேருக்கு கியாஸ் சிலிண்டர், அடுப்புகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கி பேசியதாவது:-
இந்த பகுதி அழகாகவும், பசுமையாகவும் உள்ளது. கிராம சுராச் அபியான் மற்றும் உஜ்வாலா தின விழாவையொட்டி கியாஸ் சிலிண்டர்கள் இல்லாத ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 635 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 69 ஆயிரத்து 96 பேருக்கு கியாஸ் சிலிண்டர், அடுப்புகள் இல்லை. இந்த கிராமத்தில் கியாஸ் சிலிண்டர் இல்லாத 133 பேருக்கு அவை வழங்கப்பட உள்ளது.
எந்தவித வைப்பு தொகையும் பெறுவது இல்லை. ஆனால் இலவசமாக கியாஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இதேபோல் ஆதிவாசி மற்றும் ஏழை மக்கள் விதிமுறைகளை நன்கு அறிந்து பாதுகாப்பான முறையில் சிலிண்டர் மற்றும் அடுப்புகளை பயன்படுத்த வேண்டும்.
உச்சநீதிமன்ற அனுமதி பெற்று ஆதிவாசி கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆதிவாசி மக்களின் வீடுகளுக்கு இலவசமாக மின்விளக்குகள் பொருத்துவதற்கான அரசாணையும் கிடைத்து விட்டது. எனவே பொதுமக்கள் அவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறி னார்.
முன்னதாக கியாஸ் சிலிண்டர், அடுப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என ஆதிவாசி மற்றும் பொதுமக்களுக்கு செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. விழாவில் முகவர் ஷகீம், வக்கீல் பரசுராமன் உள்பட அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story