நீர் செரியூட்டும் கிணறு அமைக்கும் பணி


நீர் செரியூட்டும் கிணறு அமைக்கும் பணி
x
தினத்தந்தி 22 April 2018 3:31 AM IST (Updated: 22 April 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே நீர் செரியூட்டும் கிணறு அமைக்கும் பணியை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி பகுதியில் பூக்காரன் வட்டத்தில் பாம்பாறு புனரமைப்பு திட்டத்தின் கீழ் நீர் செரியூட்டும் கிணறுகள் அமைக்கும் பணியின் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் பெரியசாமி, ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசன், அன்பரசன், நாட்டறம்பள்ளி தாசில்தார் பிரபுகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நீர் செரியூட்டும் கிணறுகள் அமைக்க அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார்.

விழாவில் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ஆர்.ரமேஷ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் தேவன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாரதி, ஒட்டப்பட்டி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி எழுத்தர் மலர் நன்றி கூறினார். 

Next Story