வங்கி, ஏ.டி.எம். மையங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்
வங்கி, ஏ.டி.எம். மையங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏ.டி.எம். மையம் மற்றும் வங்கிகளில் பணம் எடுப்பவர்களை பின்தொடர்ந்து நூதன முறையில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. மேலும் வங்கி அதிகாரி பேசுவது போன்று செல்போனில் பேசி, வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். ரகசிய எண்ணை பெற்று பணம் மோசடியில் ஈடுபடும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள வங்கி அதிகாரிகளை அழைத்து அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் நேற்று வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் வங்கி மேலாளர்கள், அதிகாரிகள் என 15-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமை தாங்கி பேசுகையில், ‘வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க வேண்டும்.
வங்கி அதிகாரி என்று போனில் பேசும் நபர்களிடம் ஏ.டி.எம். ரகசிய எண்களை சொல்லக்கூடாது. போனில் தொடர்பு கொள்பவர்கள், ரகசிய எண்களை பெற்றுக் கொண்டு வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் சுருட்டி விடுவார்கள் என்று வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வங்கியில் பணம் எடுக்க வருபவர்களிடம் காவலாளி மூலம் 30 நிமிடத்திற்கு ஒருமுறை விழிப்புணர்வு செய்ய வேண்டும். பணம் எடுத்த பிறகு, நீண்ட நேரம் வங்கியில் இருக்கும் வாடிக்கையாளர்களை விரைந்து செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும்.
வங்கியின் உள்ளேயும், வெளியிலும் சந்தேகப்படும்படி சுற்றித்திரியும் நபர்களை, காவலாளி மூலம் பிடித்து விசாரிக்க வேண்டும். மேலும் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். மோசடிகளை தடுத்து வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்’ என்றார்.

Related Tags :
Next Story