இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு, மர்ம ஆசாமிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம ஆசாமிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காட்டூர் பெருமாள் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் தனபால்(வயது 30). மேட்டுப்பாளையம் நகர இந்து முன்னணி துணை தலைவர். இவரது வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலை மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசினர். அதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது போடப்பட்ட தார்ப்பாய் மற்றும் மொபட் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் துப்பு துலக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவின்பேரில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தரசு தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மணி, குணசேகரன், இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், திலக், மியான்டிட் மனோ மற்றும் போலீசார் கொண்ட 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படை போலீசார் குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story