கோடை விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே கூடுதல் மலைரெயில்
கோடை விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே கூடுதல் மலைரெயில் இயக்கப்படுகிறது.
கோவை,
கோடை கால விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே கூடுதல் மலை ரெயில் இயக்கப்படுகிறது. கோவை-பழனி ரெயில் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.
சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வருகிற 1-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 15-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே கோ டைகால சிறப்பு ரெயில் கள் இயக்கப்படுகிறது. 06173 என்ற ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு கல்லார், ஹில்குரோவ் வழியாக மதியம் 12.30 மணிக்கு குன்னூரை வந்தடையும். மறுமார்க்கத்தில் 06174 என்ற ரெயில் குன்னூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு ஹில்குரோவ், கல்லார் வழியாக மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். இந்த ரெயிலில் முழுக்க, முழுக்க முன்பதிவு செய்து பயணிக்கலாம். முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு இணைந்த 2 ரெயில்பெட்டிகளும், ஒரு இரண்டாம் வகுப்பு ரெயில் பெட்டியும் இருக்கும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
கோவை-பழனி இடையேயான (06710-06709) பயணிகள் சிறப்பு ரெயில் கடந்த 18-ந்தேதி வரை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரெயில் ஜூலை மாதம் 13-ந்தேதிவரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிறுத்தங்கள் மற்றும் கால அட்டவணையில் மாற்றங்கள் இல்லை. டேனிஷ்பேட்டையில் உள்ள ‘நண்பர்கள் மிஷனரி’ வருடாந்திர மாநாட்டையொட்டி அடுத்த மாதம் 17-ந்தேதி முதல் 20-ந்தேதிவரை கோவை- சென்னை (12676, 12677) விரைவு ரெயில், சென்னை-மங்களூரு(22637) வெஸ்ட்கோஸ்ட் ரெயில்கள் ஒரு நிமிடம் டேனிஷ்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story