தடாகத்தில் புதிய போலீஸ் நிலையம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்
கோவை அருகே தடாகத்தில் புதிய போலீஸ் நிலையம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
துடியலூர்,
கோவை அருகே தடாகத்தில் புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டத்திற்குட்பட்ட தடாகத்தில் புதிய போலீஸ் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. புதிய போலீஸ் நிலையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும், தற்போதும் போலீஸ் துறையில் எவ்வித நிர்வாக குறுக்கீடுகளும் இல்லாமல் தமிழ்நாடு போலீஸ் திறம்பட செயல்பட்டு வருகிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்திய அளவில் சிறந்த போலீஸ் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையம் மத்திய அரசின் விருதை பெற்றுள்ளது.
பல்வேறு வகையில் போலீஸ் துறை அதிகாரிகள் திறம்பட செயல்பட்டாலும், பொருளாதார வளர்ச்சியால் ஏற்பட்டு வரும் பல்வேறு மாற்றங்களினாலும், நகரமயமாதல், வாகன பெருக்கம், போக்கு வரத்து நெரிசல் ஆகியவற்றினால் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், குறைக்கவும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து தடுப்பு மையங்களும், ரோந்து வாகனங்களும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
குற்றங்கள் நவீன முறையில் நடைபெற்றாலும், போலீஸ் துறையினருக்கு சமகாலத்திற்கு ஏற்ற திறனாய்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, குற்றவாளிகள் எளிதில் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். மேலும் குற்றங்கள் நடை பெறாமல் தடுக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் குற்றங்கள் குறைந்துள்ளன.
தமிழகத்தில் புதிய போலீஸ் நிலையங்கள் தொடங்கப்படுவதன் நோக்கம் பொதுமக்கள் எந்தவித சிரமும் இன்றி தங்கள் அருகாமையில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்று சட்ட தீர்வுகளை பெற்று கொள்வதற்கே ஆகும். இங்கு தொடங்கப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 30 போலீசார் பணியாற்ற உள்ளனர். இந்த போலீஸ் நிலையம், பன்னிமடை, நம்பர்-24 வீரபாண்டி, சின்னதடாகம், நம்பர்-22 நஞ்சுண்டபுரம் ஆகிய 4 தாய் கிராமங்களையும் 30 குக்கிராமங்களையும் உள்ளடக்கியதாகும் இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், ஆர்.கனகராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா, மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பாரி, டி.ஜ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story