ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.153¾ கோடி அபராதம் வசூல்
ரெயில்களில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.153 கோடியே 82 லட்சம் அபராதம் வசூலிக் கப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.
மும்பை,
மத்திய ரெயில்வே மெயின் வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி.யில் இருந்து கர்ஜத், கசாரா வரையிலும், துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டியில் இருந்து பன்வெல், கோரேகாவ் வரையிலும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் தினமும் சுமார் 40 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். இதில் பலர் உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்வதால் ரெயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க டிக்கெட் பரிசோதகர்கள் மத்திய ரெயில்வே ரெயில்நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மாதம் வரை மத்திய ரெயில்வே வழித்தடத்தில் உரிய டிக்கெட் இன்றி பயணம் செய்து சுமார் 31 லட்சத்து 45 ஆயிரம் பேர் பிடிபட்டு உள்ளனர்.
அவர்களிடம் இருந்து ரூ.153 கோடியே 82 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை 2016-17 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 19.58 சதவீதம் அதிகம் ஆகும். அந்த ஆண்டு 26 லட்சத்து 88 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.128 கோடியே 63 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு இருந்தது. இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Related Tags :
Next Story