நடப்பு நிதியாண்டில் ரூ.6,930 கோடி கடன் வழங்க இலக்கு, கலெக்டர் தகவல்
சிவகங்கை மாவட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.6 ஆயிரத்து 930 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடப்பு நிதியாண்டில் மாவட்டத்திற்கு கடன் திட்ட கையேடு வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் லதா தலைமை தாங்கி பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.6 ஆயிரத்து 930 கோடி கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண் திட்ட கடனுக்கு ரூ.4 ஆயிரத்து 51 கோடியும், சிறு, குறு மத்திய தொழில்களுக்கு ரூ.6 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரமும், கல்வி, வீட்டு வசதி மற்றும் இதர கடன்களுக்காக ரூ.1,973 கோடியும் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு நிதியாண்டில் அரசு நிதி உதவியுடன் கூடிய திட்டங்களான தாட்கோ, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டம் மூலம் ரூ.230 கோடி நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை போல குறிப்பிட்ட கடன் திட்டங்களுக்கு எல்லா வங்கியாளர்களும், தகுதியான பயனாளிகளுக்குரிய நேரத்தில் கடனை வழங்கி மக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story