கோஷ்டி மோதலில் ஓய்வு பெற்ற அதிகாரி உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு 7 பேருக்கு வலைவீச்சு
திருமக்கோட்டை அருகே நடந்த கோஷ்டி மோதலில் ஓய்வு பெற்ற அதிகாரி உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருமக்கோட்டை,
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள மேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது70). ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை அதிகாரியான இவர் தற்போது கீழக்குறிச்சியில் வசித்து வருகிறார். மேலநத்தத்தை சேர்ந்த புண்ணியமூர்த்திக்கு சொந்தமான நிலம் மேலநத்தம் பிலவாடி குளக்கரையில் உள்ளது. இந்த நிலத்தை ஜெயபால் வாங்கி இருந்தார். இந்த நிலத்துக்கு அருகே ஆவிக்கோட்டையை சேர்ந்த ஞானசம்பந்தம் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இவர், ஜெயபாலிடம், “நிலத்தை நான் வாங்குவதாக இருந்தேன் நீ வாங்கிவிட்டாயா” என கேட்டு பல முறை தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெயபால் மற்றும் அவருடைய தரப்பை சேர்ந்தவர்கள் அந்த நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஞானசம்பந்தம் தரப்பை சேர்ந்தவர்களுக்கும், ஜெயபால் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஞானசம்பந்தம் தரப் பை சேர்ந்தவர்கள், ஜெயபால் தரப்பை சேர்ந்தவர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். மேலும் அங்கு நின்ற கார், டிராக்டர், 3 மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர்.
வலைவீச்சு
இதில் ஜெயபால், கவுதமன் (26), கருணாநிதி (55), தமிழரசன் (25), சாமி (25), கர்ணன் (50) ஆகிய 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அவர்கள் 6 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஜெயபால் திருமக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குஞ்சிதபாதம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, ஞானசம்பந்தம் உள்பட 7 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தின்போது ஞானசம்பந்தம் தரப்பினர் பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story