கோடை விடுமுறையையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு


கோடை விடுமுறையையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 April 2018 4:30 AM IST (Updated: 23 April 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறையையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

இந்த நிலையில் கோடை விடுமுறை தொடங்கி உள்ளது. பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து அருணாசலேஸ்வரரை சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ள பகுதி அக்னி ஸ்தலம் என்று சொல்வதற்கு ஏற்ப கடந்த சில தினங்களாக திருவண்ணாமலையில் வெயில் கொளுத்தி வருகிறது. அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நடமாடும் பகுதியில் ‘கூலிங் பெயிண்ட்’ பூசப்பட்டு உள்ளது. மேலும் தேங்காய் நார் தரை விரிப்பு அமைக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் அவதிபட்டனர். எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடந்து செல்லும் பகுதியில் தகரத்தினால் ஆன நிழற்குடையினை வரிசையாக நிறுத்தினால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Next Story