பிவண்டி கோர்ட்டில் ராகுல் காந்தி இன்று ஆஜர் ஆவாரா?


பிவண்டி கோர்ட்டில் ராகுல் காந்தி இன்று ஆஜர் ஆவாரா?
x
தினத்தந்தி 23 April 2018 5:17 AM IST (Updated: 23 April 2018 5:17 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கில் பிவண்டி கோர்ட்டில் இன்று ராகுல்காந்தி ஆஜர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தானே,

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பொதுக்கூட்டதில் பேசி யபோது மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு தொடர்பு இருப் பதாக குற்றம்சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த ராஜேஷ் குந்த் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு ராகுல் காந்தி ஆதாரங்கள் இன்றி போலியாக குற்றம்சாட்டுவதாக கூறி அவர் மீது தானே மாவட்டம் பிவண்டி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு தொடர்பாக பிவண்டி கோர்ட்டில் ஆஜரான ராகுல்காந்தி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு மகாத்மா காந்தி கொலையில் தொடர்பு இருப்பதாக கூறிய தனது கருத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.

இதையடுத்து இன்று பிவண்டி கோர்ட்டில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அதேநேரத்தில் தற்போது கர்நாடக சட்டமன்ற தேர்தல் பணிகளில் ராகுல்காந்தி ஈடுபட்டு வருவதால் அவர் பிவண்டி கோர்ட்டில் ஆஜர் ஆவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பிவண்டியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறுகையில், ‘இதுவரையில் ராகுல்காந்தி கோர்ட்டுக்கு வருவது குறித்து எந்தவொரு தகவலும் கட்சி சார்பில் மாவட்ட உறுப்பினர்களுக்கு வரவில்லை’ என தெரிவித்தார். 

Next Story