தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு கூடுதலாக ரூ.5 ஆயிரம் பணம் வசூல், கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்
தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு கூடுதலாக ரூ.5 ஆயிரம் பணம் வசூலித்ததாக கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி நடக்க முடியாமல் இருக்கைகளில் அமர்ந்து இருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று கொண்டார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். அதன்படி தெப்பக்காடு யானை கேம்ப்பாடி பகுதியை சேர்ந்த பெட்டகுரும்பர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த ஆதிவாசி மக்கள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
யானை கேம்ப்பாடி கிராமத்தில் 105 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி வாழ்ந்து வருகிறோம். எங்களது கிராமத்திற்கு தனிநபர் கழிப்பறை கட்ட அரசு மூலம் ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று கூறினர். இந்த தொகை போதாது என்று எங்களிடம் மேலும் ரூ.5 ஆயிரம் வசூலித்து கொண்டனர். நாங்கள் சுய உதவிக்குழுக்களிடம் கடன் வாங்கி அந்த தொகையை செலுத்தினோம். 67 பேருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இந்த நிலையில் எங்கள் வீட்டின் அருகே கழிப்பறை கட்டி வருகிறோம். ஆனால், வனத்துறையினர் வீட்டையொட்டி கழிப்பறை கட்டுங்கள் என்று கூறுகின்றனர். எனவே, கழிப்பறை கட்டும் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஊட்டி கார்டன் சிறு வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கடை வைத்து சிறு வியாபாரம் செய்து வந்தோம். நாங்கள் கூடையிலும், வண்டியிலும் பழங்கள், தாவர வகைகள், காய்கறிகளை வைத்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து பிழைப்பு நடத்தினோம். நாங்கள் வியாபாரம் செய்வதற்கு தொழில் வரி செலுத்தப்படுகிறது. கடந்த 20-ந் தேதி நடைபாதை மற்றும் சாலையோரங்களில் வைக்கப்பட்டு இருந்த கடைகளை அகற்றவும், காலி செய்யவும் அதிகாரிகள் கூறினர். திடீர் என்று கடைகளை காலி செய்ததால் 200 குடும்பத்தினர் மாற்று தொழில் எதுவும் தெரியாமல், நாங்கள் துன்பத்திற்கு ஆளாகி உள்ளோம். ஆகவே, மாவட்ட நிர்வாகம் எங்களை மீண்டும் பூங்கா பகுதியில் கடைகள் வைத்து சிறு வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
குன்னூர் அருகே உள்ள மணியபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், குன்னூரில் இருந்து காட்டேரி, சின்ன கரும்பாலம், பெரிய கரும்பாலம், குன்னக்கொம்பை, நெடிகாடு, அதிகரட்டி வழியாக ஊட்டிக்கு 2 அரசு பஸ்கள் இயங்கி வந்தன. தற்போது அந்த அரசு பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மேற்கண்ட வழித்தடத்தில் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
பா.ஜனதா அமைப்புச்சாரா தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மயில்சாமி பதாகையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தார். அந்த மனுவில், கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நியமித்த தினக்கூலி ரூ.500-ஐ ஒப்பந்ததாரர் வழங்குவது இல்லை. அதற்கு குறைவாக ரூ.5 ஆயிரத்து 700 முதல் ரூ.9 ஆயிரம் வரை வழங்குகிறார்கள். இதனால் துப்புரவு பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேற்படி ஒப்பந்த உரிமத்தை ரத்து செய்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 202 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story