காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தி.மு.க., தோழமை கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினர், பல்வேறு அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அரியலூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினர், பல்வேறு அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரியலூரில் நேற்று மாலை தி.மு.க., தோழமை கட்சியினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அதன்படி, அண்ணா சிலையில் இருந்து, மார்க்கெட் தெரு, தேரடி, வெள்ளாளத்தெரு, சத்திரம் வரை நீண்ட வரிசையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர், காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சின்னப்பா மற்றும் திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, எம்.ஜி.ஆர். கழகத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story