திருப்பூரில் பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் பெற்றோருடன் வாலிபர் கைது
திருப்பூரில் பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் வாலிபரை பெற்றோருடன் போலீசார் கைது செய்தனர்.
வீரபாண்டி,
திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்த தம்பதியின் 15 வயது மகள் கடந்த ஆண்டு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். அப்போது, அதே பகுதியை சேர்ந்த செல்லபாண்டி-ராஜேஸ்வரி தம்பதியின் மகன் செந்தூர்பாண்டி(வயது 21) என்பவர் அந்த மாணவியை காதலித்து வந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர், செந்தூர்பாண்டியை கண்டித்துள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து அந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில் செந்தூர்பாண்டியின் குடும்பத்தினர் திருப்பூரில் உள்ள வீட்டை திடீரென காலி செய்துவிட்டு சொந்த ஊரான மதுரை மாவட்டம் பேரையூருக்கு சென்றுவிட்டனர்.
அதே நேரம் 9-ம் வகுப்பு தேர்வு முடிந்து வீட்டில் இருந்த மாணவி, 10-ம் வகுப்பு தேர்வுக்காக அருகில் உள்ள டியூசன் மையத்துக்கு சென்றுவந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி டியூசனுக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடிவந்தனர். ஆனால் மாணவி கிடைக்கவில்லை. அவளை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாணவியின் பெற்றோர் ஐகோர்ட்டில் ‘ஆட்கொணர்வு‘ மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரணை செய்த நீதிபதி, காணாமல் போன பள்ளி மாணவியை உடனே கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வீரபாண்டி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து காணாமல் போன மாணவியை தேடும் பணியை போலீசார் மீண்டும் தொடங்கினார்கள். இதற்காக வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், செந்தூர்பாண்டி, மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் மதுரை பேரையூர் சென்று செந்தூர்பாண்டியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, கோவை வேலாண்டிபாளையத்தில் செந்தூர்பாண்டி, அந்த மாணவியுடன் தங்கி இருப்பது தெரியவந்தது.
உடனே போலீசார் கோவைக்கு சென்று, செந்தூர்பாண்டியுடன் இருந்த மாணவியை மீட்டனர். மேலும், சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்ததாக செந்தூர்பாண்டி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய பெற்றோர் செல்லபாண்டி, ராஜேஸ்வரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story