கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்


கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
x
தினத்தந்தி 24 April 2018 4:00 AM IST (Updated: 24 April 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

கடல் சீற்றத்தால் கிள்ளியூர் தொகுதிக்கு உள்பட்ட கடலோர மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தேங்காப்பட்டணம், வள்ளவிளை, மார்த்தாண்டம்துறை, நீரோடி ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.

கருங்கல்,

கடல் சீற்றத்தால் கிள்ளியூர் தொகுதிக்கு உள்பட்ட கடலோர மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தேங்காப்பட்டணம், வள்ளவிளை, மார்த்தாண்டம்துறை, நீரோடி ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீரோடி முதல் குறும்பனை வரை உள்ள ஒவ்வொரு கடலோர கிராமங்களிலும் தூண்டில் வளைவு அமைப்பதற்கு 2016-17 பட்ஜெட்டில் ரூ.220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் அறிவித்தார். கடல் சீற்றத்தினால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. அதே போல் கடந்த ஆண்டு வீசிய ஒகி புயலால் கடலோர கிராமங்களில் சாலைகளும், குடியிருப்புகளும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தொடர்ந்து சட்டசபையில் வலியுறுத்தினேன். இதன் காரணமாக கலெக்டர்கள் கூட்டத்தில் அவசர கால பணியாக வள்ளவிளை துறையில் கடல் அரிப்பை தடுக்க ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் கடலரிப்பு தடுப்பு சுவர் பணிகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தூண்டில் வளைவு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story