காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காரைக்காலில் மனித சங்கிலி போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காரைக்காலில் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 24 April 2018 4:00 AM IST (Updated: 24 April 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, காரைக்காலில் தி.மு.க. தலைமையில் அனைத்து கட்சி சார்பில், நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

காரைக்கால்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி காரைக்கால் அம்மையார் கோவில் முதல், டவுன் போலீஸ் நிலையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமை தாங்கினார். கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கமலக்கண்ணன் கலந்துகொண்டார்.

இந்த போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதுச்சேரி படைப்பாளி மக்கள் கட்சி மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் என 800-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story