மின்துறை அலுவலகங்கள் முன் முற்றுகை நடத்துவேன், கோபிகா எம்.எல்.ஏ. அறிக்கை
அதிகாரிகள் பற்றாக் குறையை காரணம் காட்டி பணிகள் தேங்கி கிடக்கின்றன. இதே நிலை நீடித்தால் மின்துறை அலுவலகங்களில் முற்றுகைப் போராட்டம் நடத்துவேன் என்று கோபிகா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
திருபுவனை,
திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. கோபிகா விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணத்தை அடிக்கடி உயர்த்தியதில் பொதுமக்கள் அந்த துன்பத்தில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலை இருந்து வருகிறது. இந்தநிலையில் கோடைக்காலத்தையும் பொருட்படுத்தாமல் மின் கட்டணத்தை செலுத்தவில்லை என்று அதிகாரிகள் மின் இணைப்பு துண்டிப்பு செய்கிறார்கள்.
தெருமின் விளக்குகள் எரியவில்லை என்று புகார் தெரிவித்தால் மட்டும் போதுமான அளவிற்கு மின் உபகரணம் இல்லை என்று கூறி கை விரிக்கிறார்கள். கிராமப்புற வீடுகளில் மின்துண்டிப்பு செய்யும் அதிகாரிகள் தெரு விளக்குகள் எரியாததை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?
தமிழக கிராமங்களில் அதிகம் வெளிச்சம் தரும் எல்.இ.டி தெருமின்விளக்குகள் பலவருடங்களுக்கு முன்பே எரிய தொடங்கிவிட்டபோதிலும் ஏன் இன்னும் புதுச்சேரி மாநில கிராமங்களில் எல்.இ.டி. விளக்குகள் நடைமுறைக்கு ஏன் வரவில்லை? இதனால் கிராமங்களில் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன.
கிராமத்தில் உள்ள அனைத்து மின்துறை அலுவலகத்திலும் உயர் அதிகாரிகள் பற்றாக்குறையை காரணம்காட்டி பொதுமக்களின் அலுவலக வேலைகள் தேங்கி கிடக்கும் அவலநிலை நீடித்து வருகிறது. இதேநிலை தொடர்ந்து நீடித்தால் எங்கள் கட்சி தலைமையின் ஒப்புதலோடு மின்துறை அலுவலகங்களில் பொதுமக்களுடன் முற்றுகை போராட்டம் நடத்துவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story