தேனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
தேனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
தேனி,
29-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு குறித்த வாகன விழிப்புணர்வு பேரணி தேனியில் நடந்தது. தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேரணி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். பேரணியை, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை அவர் வழங்கினார்.
இதில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பார்த்திபன் எம்.பி., ஜக்கையன் எம்.எல்.ஏ., வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக்முகமது, தாசில்தார் சத்தியபாமா, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி மதுரை சாலை, நேரு சிலை சிக்னல், பெரியகுளம் சாலை வழியாக நகராட்சி அலுவலகம் அருகில் நிறைவு அடைந்தது.
இதில் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி வாகனங்களும், ஹெல்மெட் அணிந்த இருசக்கர வாகன ஓட்டிகளும் பேரணியாக சென்றனர்.
Related Tags :
Next Story