குடிபோதையில் தகராறு செய்த கணவரை உலக்கையால் அடித்துக்கொன்ற மனைவி


குடிபோதையில் தகராறு செய்த கணவரை உலக்கையால் அடித்துக்கொன்ற மனைவி
x
தினத்தந்தி 24 April 2018 4:15 AM IST (Updated: 24 April 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

பனவடலிசத்திரம் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை உலக்கையால் அடித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.

பனவடலிசத்திரம்,

நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள தெற்கு பூலாங்குளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 42), விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி (39). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. சுபா (7) என்ற மகளும், கார்த்திக் (6) என்ற மகனும் உள்ளனர்.

லட்சுமணனுக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவர் மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி குடிபோதையில் தகராறு செய்த கணவர் லட்சுமணனை உலக்கையால் அடித்தாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அய்யாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பனவடலிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி விசாரணை நடத்தி, லட்சுமியை கைது செய்தார்.

குடிபோதையில் தகராறு செய்த கணவரை மனைவியே அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story