தி.மு.க. கூட்டணி கட்சிகள் மனித சங்கிலி போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்


தி.மு.க. கூட்டணி கட்சிகள் மனித சங்கிலி போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 April 2018 4:15 AM IST (Updated: 24 April 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று பாளையங்கோட்டையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று நெல்லையில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அப்துல் வகாப் (மாநகர் மாவட்டம்), ஆவுடையப்பன் (நெல்லை கிழக்கு), எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், பூங்கோதை, லட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அப்பாவு, மாலை ராஜா, நெசவாளர் அணி பெருமாள், பகுதி செயலாளர்கள் பூக்கடை அண்ணாத்துரை, கோபி நமச்சிவாயம், மாநகர பிரதிநிதி சண்முகசுந்தரம், முன்னாள் யூனியன் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன் (மாநகர் மாவட்டம்), எஸ்.கே.எம்.சிவகுமார் (கிழக்கு), ம.தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம், புறநகர் மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் கோதர் மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், செயலாளர் உஸ்மான் கான், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முருகன்குறிச்சியில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில் இருந்து தொடங்கி வாய்க்கால் பாலம், வ.உ.சி. திடல், எல்.ஐ.சி. அலுவலகம் வழியாக பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள ஜோதிபுரம் திடல் வரை வரிசையாக கைகளை கோர்த்து மனிதசங்கிலியாக நின்றனர். அனைவரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர்.

Next Story