காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 April 2018 4:15 AM IST (Updated: 25 April 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேராவூரணியில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேராவூரணி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தமிழக விவசாயிகள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தே.மு.தி.க. விவசாய அணி சார்பில் பேராவூரணி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் குருவிக்கரம்பை வி.எஸ்.கே.பழனிவேல் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆர்.எஸ்.டி. சுப்பையன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ஏ.செல்லத்துரை, எஸ்.செந்தில்நாதன், மாவட்ட அவைத்தலைவர் முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.செல்வராஜ், பூபேஷ்குமார், பால்சாமி, நகர செயலாளர் எஸ்.ஆர்.சீனிவாசன், பெருமகளுர் பேரூர் கழக செயலாளர் கண்ணன் உள்பட தே.மு.தி.க.வினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

Next Story