காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 25 April 2018 4:15 AM IST (Updated: 25 April 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாப்பா நாட்டில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரத்தநாடு,

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வலியுறுத்தி ஒரத்தநாட்டை அடுத்துள்ள பாப்பாநாட்டில் விவசாயிகள் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு காவிரி சமவெளி பாதுகாப்பு கூட்டமைப்பை சேர்ந்த தி.இளங்கோ தலைமை தாங்கினார்.

காவிரி சமவெளி பாதுகாப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோ.ஜெய்சங்கர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., வக்கீல் பிரகாசம், மருத்துவர் பாரதிசெல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி சீனி.முருகையன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் திருப்பதி, பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

உண்ணாவிரத போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பு மாநில பொருளாளர் காளியப்பன் முடித்து வைத்தார். 

Next Story