ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அ.குமரெட்டியபுரத்தில் 72-வது நாளாக போராட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்களின் போராட்டம் நேற்று 72-வது நாளாக நீடித்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்களின் போராட்டம் நேற்று 72-வது நாளாக நீடித்தது.
ஸ்டெர்லைட்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 72-வது நாளாக நடந்தது. இதில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த பகுதி மக்கள் கடந்த 21-ந் தேதி முதல் ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில்அகர்வால் உருவபொம்மையை அந்த பகுதியில் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பண்டாரம்பட்டி, சில்வர்புரம், மடத்தூர், மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம், தபால் தந்தி காலனி, 3-வது மைல், சிலோன் காலனி, பாத்திமாநகர், பனிமயமாதா ஆலயம் அருகே உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
வழக்கு
நேற்று முன்தினம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக மக்கள் பேரணியாக திரண்டு சென்றனர். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த வாஞ்சிநாதன், ராமச்சந்திரன், அரிராகவன் உள்ளிட்ட 15 பேர் மற்றும் சிலர் மீதும் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story