குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
இருங்கலாக்குறிச்சி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே இருங்கலாக்குறிச்சி கிராமத்தில் கீழத்தெரு மற்றும் காலனி தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். இந்நிலையில் மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால் கடந்த 10 நாட்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வெகு தொலைவில் சென்று குடிநீர் எடுத்து வந்தனர்.
சாலை மறியல்
மின்மோட்டார் பழுது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இது நாள் வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங் களுடன் இருங்கலாக்குறிச்சி கிராமத்தில் செந்துறை-கோட்டைக்காடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குவாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடனடியாக மின்மோட்டார் சரிசெய்யப்பட்டு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் செந்துறை-கோட்டைக்காடு சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story