விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஆசிரியர்கள் பலர் ஈடுபட்டு வரு கின்றனர். இந்த நிலையில் நேற்று காலை விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து விட்டு, பள்ளி வளாகத்தில் அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி 21 மாத சம்பள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஆள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். ஆசிரியர், அலுவலர்கள் பணியிடங்களை குறைக்க நியமிக்கப்பட்டு உள்ள குழுவை கலைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Related Tags :
Next Story