கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகாரிகள் வராததை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல்


கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகாரிகள் வராததை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 April 2018 4:15 AM IST (Updated: 25 April 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று மனுவை வாபஸ் பெறும் கடைசி நாளாகும்.ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனை கண்டித்து ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தி.மு.க.வினர் கொளக்காநத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேர்தலை ஒத்தி வைப்பதாக சங்க அலுவலர் அறிவிப்பு பலகையில் ஒட்டியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதேபோல் ஆலத்தூர் தாலுகா சாத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நேற்று முன்தினம் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. நேற்று வேட்பு மனு வாபஸ் நடைபெற வேண்டும். ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சிறுவாச்சூர் நெடுஞ்சாலையில் சாத்தனூரில் மறியலில் ஈடுபட்டனர். 

Next Story