அங்கன்வாடி பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக கூறி, பெண் தர்ணா போராட்டம்
அங்கன்வாடி பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக கூறி, குடும்பத்துடன் பெண் தர்ணா போராட்டம்.
மத்தூர்,
போச்சம்பள்ளி தாலுகா கொடமாண்டப்பட்டி ஊராட்சி மேல்சந்தம்பட்டியைச் சேர்ந்தவர் ரவீந்தராசு. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் ஜோதி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:- நான் மேல்சந்தம்பட்டியில் வசித்து வருகிறேன். நாங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோம். இந்த நிலையில் அங்கன்வாடி பணிக்காக விண்ணப்பித்திருந்தேன்.
கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி நேர்முகத் தேர்விலும் பங்கேற்றேன். ஆனால் இதுவரை எனக்கு பணி வழங்கவில்லை. அங்கன்வாடி பணி செய்வதற்கான அனைத்து தகுதியும் எனக்கு உள்ளது. எனவே எனக்கு கீழ்சந்தம்பட்டி அங்கன்வாடி மையத்தில் பணி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த பணி பர்கூர் ஒன்றியம் சின்ன பாளேத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜோதி தனது குடும்பத்தினர் மற்றும் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சிலருடன் கீழ்சந்தம்பட்டி அங்கன்வாடி மையம் முன்பாக அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து ஜோதியின் கணவரும், தமிழக விவசாயிகள் சங்க மத்தூர் ஒன்றிய செயலாளருமான ரவீந்தராசு நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும். இதற்காக ஏற்கனவே நேர்காணல் செய்து தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட்டது. இந்த பணி ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து நீண்ட நேர தர்ணா போராட்டத்திற்கு பிறகு ஜோதி குடும்பத்தினருடன் வீட்டிற்கு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story